விடுமுறை ஏன் இல்லை?

வருடத்தில் ஒருநாள் கூட விடுமுறை இல்லாமல் வெளிவரும் ஒரே நாளிதழ் தினமலர்.

பத்திரிகைகளும் பண்டிகை நாட்களுக்கு விடுமுறை விடும் பழக்கம் உள்ளது. விடுமுறைக்கு மறுநாள் பத்திரிகைகள் வெளிவராது.

தினமும் காலையில் எழுந்த உடன் காலையில் பத்திரிக்கை படிக்காவிட்டால் பலர் அன்று ஏதோ ஒன்றை தவற விட்டதாகத்தான் கருதுவார்கள்.

என்னதான் பண்டிகை என்றாலும், காலையில் பால் வினியோகம் தடையின்றி நடக்கிறது. போக்குவரத்து வழக்கம் போல் இயங்குகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட வில்லை. ரேடியோ, டெலிவிஷன் வேலை செய்கிறது. பத்திரிகை மட்டும் ஏன் வரக்கூடாது? என, ஏராளமான வாசகர்கள் கடிதம் எழுதி கேட்டனர்.

வாசகர்கள் தான் முதலாளிகள் என்பதால், அவர்களின் விருப்பப்படி தினமலர் நிர்வாகம் முடிவு எடுத்தது. அதன் படி இப்போது தினமலர் இதழ் ஆண்டில் 365 நாட்களும் வெளிவருகிறது.

ஏஜன் டுகளுக்கும் டெலிவரி பாய்சுக்கும் இதனால் சிரமம் தான் என்றாலும், மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய சிரமங்களை தாங்கி கொள்கின்றனர்.

Advertisement