மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா

விழுப்புரம்: விழுப்புரத்தில் பவ்டா நிறுவனம் சார்பில் ஆயிரம் மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா நடந்தது.
விழுப்புரம் பவ்டா நிறுவனம் கடந்த 1985ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தொடங்கப்பட்டு, சேவையாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து மாவட்டங்களிலும், கடந்தாண்டு வரை 80 வயதுக்கும் மேற்பட்ட 7,498 மூத்தக் குடிமக்களை கவுரப்படுத்தி நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு, பவ்டா 41வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, 80 வயதுக்கு மேற்பட்ட 1000 மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா, விழுப்புரம் பவ்டா குழும தலைமை அலுவலகம் சார்பில் நேற்று நடந்தது.
விழுப்புரம் லோகலட்சுமி மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, பவ்டா குழும நிறுவனர் ஜாஸ்லின் தம்பி தலைமை தாங்கினார். இயக்குநர்கள் ஆசீர்ராஜா செல்வன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர். ஏ.ஜி.ஆலயம் அருள்திரு டிக்சன் இறைவேண்டல் பாடினார்.
கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான், எஸ்.பி., சரவணன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் ஆகியோர், 80 வயதிற்கு மேற்பட்ட 1000 மூத்த குடிமக்களுக்கு ஆடைகள், ஊட்டச்சத்துகள், பழங்கள், ஊன்றுகோல்கள் வழங்கியும், ராஜ கிரீடம் அணிவித்தும் கவுரவித்தனர்.
சமூக ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், எழுத்தாளர்கள் வாழ்த்தினர். மூத்த குடிமக்களுக்கான இலவச சுகாதார முகாம் நடந்தது. பவ்டா முதன்மை கண்காணிப்பு அதிகாரி மாடசாமி நன்றி கூறினார். பவ்டா பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.
மேலும்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
-
வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்; 30 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அவலம்
-
முதல்வர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபர்களுக்கு போலீசார் வலை
-
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
-
இலங்கை, வங்கதேசம், நேபாளம் போல இந்தியாவிலும் வன்முறையை துாண்ட முயற்சி; மோகன் பகவத் எச்சரிக்கை
-
டிரம்ப்பின் பிழையை சுட்டிக்காட்டி ஐரோப்பிய தலைவர்கள் கூட்டத்தில் சிரிப்பலை