நாட்டு நலனை பாதுகாக்கும் புத்திசாலித்தனமான தலைவர்: மோடியை பாராட்டும் புடின்

மாஸ்கோ: ''பிரதமர் மோடி இந்திய நலன்களை பாதுகாக்கும் புத்திசாலித்தனமான தலைவர்'' என ரஷ்ய அதிபர் புடின் பாராட்டி உள்ளார்.
சோச்சி நகரில் நடந்த ரஷ்ய நிபுணர்கள் கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புடின் பேசியதாவது: ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அதிக வரி விதிப்பது உலக அளவில் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இந்தியா மற்றும் சீனா மீது வரிகளை விதிக்கும் டிரம்பின் நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியை தழுவும். வரி விதிப்பது உலகளாவிய பண வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். மேற்கத்திய நாடுகள் தடை விதித்த போதிலும், நேர்மையான பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்வதே ரஷ்யாவின் நோக்கமாகும். இந்தியா ஒருபோதும் தன்னை அவமானப்படுத்த அனுமதிக்காது. பிரதமர் மோடியை அறிவேன். அவர் ஒருபோதும் தவறான முடிவுகளை எடுக்க மாட்டார்.
@quote@இந்தியாவும், சீனாவும் ஒரு சார்பான முடிவுகளை எடுக்க மறுத்துவிட்டன. அவர்கள் நேர்மையான உலகை படைக்க விரும்புகின்றனர். பிரதமர் மோடி இந்திய நலன்களை பாதுகாக்கும், நேர்மையான புத்திசாலித்தனமான தலைவர். quote
உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். போர்க்களத்தில் எங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டோம். ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே எந்தப் பிரச்னையோ, பதட்டமோ ஏற்பட்டது இல்லை. பிரதமர் மோடி தனது நண்பர். எங்கள் வெளியுறவு அமைச்சகங்கள் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.
வாசகர் கருத்து (6)
எண்ணெய்ச்சாமி - ,
03 அக்,2025 - 13:45 Report Abuse

0
0
Reply
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
03 அக்,2025 - 10:51 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
03 அக்,2025 - 09:05 Report Abuse

0
0
Reply
pmsamy - ,
03 அக்,2025 - 07:24 Report Abuse

0
0
vivek - ,
03 அக்,2025 - 07:29Report Abuse

0
0
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
03 அக்,2025 - 12:36Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாஜவுக்கு எம்.எல்.ஏ.,க்களை சப்ளை செய்யும் காங்கிரஸ்: சொல்கிறார் கெஜ்ரிவால்
-
ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதிபர் டிரம்ப் புதிய எச்சரிக்கை
-
ஜாதிப்பெயர்களின் இறுதி எழுத்தில் மாற்றம்: பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் தகவல்
-
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும்… இருமல் மருந்து விற்பனைக்குத் தடை
-
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
-
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் 'அரட்டை'யில் இணையுங்கள் வாசகர்களே!
Advertisement
Advertisement