கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
குமாரபாளையம்:சேலம் பஸ்சில் வந்த கள்ளக்காதல் ஜோடி, விஷம் குடித்து குமாரபாளையத்தில் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் ரேவதி, 35; இவரது கணவர் ராஜ்குமார், 35; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுமிதா, 40, என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த ரேவதி, கணவரை கண்டித்துள்ளார். செப்., 29ல், ராஜ்குமார், சத்தியமங்கலம் பகுதிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குமாரபாளையம் பகுதியிலிருந்து தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர், ரேவதிக்கு அலைபேசியில், 'உங்கள் கணவரும், அவருடன் வந்த பெண்ணும் மயங்கியதால், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்' என, தெரிவித்தார்.
இதையடுத்து, ரேவதி தன் உறவினர்களுடன் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற பஸ்சில் ஏறிய கள்ளக்காதல் ஜோடி, மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளனர். குமாரபாளையம் அருகே வந்தபோது, இரவு, 9:30 மணிக்கு ஓட்டலில் சாப்பிடுவதற்காக பஸ்சை நிறுத்தியுள்ளனர்.
அங்கு இறங்கி நடந்து சென்றபோது, ராஜ்குமார் மற்றும் சுமிதா இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சிறிது நேரத்தில் சுமிதா இறந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த ராஜ்குமார், நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு இறந்தது தெரியவந்தது. குமாரபாளையம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கோல்ட்ரிப் சிரப் பயன்பாடு அமைச்சர் மறுப்பு
-
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அமைச்சர் சிறப்பு அதிகாரி கைது
-
ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் எஸ்.ஐ.டி., விசாரணை
-
தசராவால் குப்பை அதிகரிப்பு சுற்றுப்புற சூழல் கடும் பாதிப்பு
-
ஆந்திர அமைச்சருக்கு பிரியங்க் கார்கே பதிலடி
-
அண்ணன் மகனின் நிலம் 'ஸ்வாகா': நகர ஆயுதப்படை டி.எஸ்.பி., சிக்கினார்