25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து தப்பிய 3 முதியவர்கள்

குன்னுார்:பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், மூன்று முதியவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர்கள், ராஜன் திருமலை, 70, அலுவியா திருமலை, 68, சாமுவேல் திருமலை, 68. ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள், நேற்று கோவைக்கு காரில் சென்று ஊட்டி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.

இரவு, 7:00 மணிக்கு குன்னுார் லாஸ் நீர்வீழ்ச்சி அருகே வந்தபோது, 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. குன்னுார் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டனர். சிறு காயங்களுடன் மூவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

Advertisement