விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், வடக்குசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்துராஜ், 23; சென்னையில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்தார். வடக்குசெவல் கிராமத்தில் நடந்த திருவிழாவிற்காக சில தினங்களுக்கு முன், அவர் ஊருக்கு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பெத்துராஜ், அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர்கள் மாரிமுத்து, 18, மாரிலிங்கம், 19, ஆகியோருடன் ஒரே பைக்கில் பெட்ரோல் போடுவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில், வேம்பார் நோக்கி சென்றார். முன்னால் சென்று கொண்டிருந்த காரை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த, லாரி மீது பைக் மோதியது.
துாக்கி வீசப்பட்ட மூவரில், பெத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரிலிங்கம் உயிரிழந்தார். படுகாயமடைந்த மாரிமுத்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
சூரங்குடி போலீசார் வழக்கு பதிந்து, லாரி டிரைவரான திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன், 43, என்பவரை கைது செய்தனர்.
மேலும்
-
கோல்ட்ரிப் சிரப் பயன்பாடு அமைச்சர் மறுப்பு
-
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அமைச்சர் சிறப்பு அதிகாரி கைது
-
ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் எஸ்.ஐ.டி., விசாரணை
-
தசராவால் குப்பை அதிகரிப்பு சுற்றுப்புற சூழல் கடும் பாதிப்பு
-
ஆந்திர அமைச்சருக்கு பிரியங்க் கார்கே பதிலடி
-
அண்ணன் மகனின் நிலம் 'ஸ்வாகா': நகர ஆயுதப்படை டி.எஸ்.பி., சிக்கினார்