விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி

1

தேவரகட்டு: ஆந்திராவின் தேவரகட்டு என்ற இடத்தில் நடந்த பன்னி திருவிழாவில், சிலம்பு சண்டையில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்தனர்; 90 பேர் காயம் அடைந்தனர்.

ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் உள்ள தேவரகட்டு பகுதியில், விஜயதசமி அன்று இரவு பன்னி திருவிழா கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, மாலாமல்லேஸ்வரா சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிலை யாருக்கு என்பது தொடர்பாக இரு தரப்பி னர் இடையே சிலம்பு சண்டை நடப்பது வழக்கம்.

பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த சிலம்பு சண்டையில், ஊர் மக்கள் இரு குழுக்களாக பிரிந்து சண்டையிடுவர். இந்த சண்டையில் இருவர் உயிரிழந்தனர்.

அதில் ஒருவர், தலையில் பலத்த காயம் அடைந்ததால் இறந்ததாகவும், மற்றொருவர் மாரடைப்பால் இறந்ததாகவும் சப் - கலெக்டர் மவுரி பரத்வாஜ் தெரிவித்தார். இந்த மோதலில், 90 பேர் காயம் அடைந்தனர். இது, கடந்த ஆண்டை விட குறைவு என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

இந்த விழாவையொட்டி தேவரகட்டு பகுதியில், 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 'ட்ரோன்'கள் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன. 16 கிராமங்களில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பிரசாரம் காரணமாக வன்முறை குறைந்துள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement