விவசாயத்திற்கு குடிநீர் திருட்டு பற்றாக்குறையால் மக்கள் சிரமம்
நரிக்குடி: நரிக்குடி காத்தான்பட்டியில் விவசாயத்திற்கு குடிநீரை திருடுவதால், பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.
நரிக்குடி இலுப்பையூர் ஊராட்சி காத்தான்பட்டியில் குடிநீர் சப்ளை செய்ய, உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தினமும் 2 மணி நேரம் சப்ளை செய்யப்பட்டது. இதுவும் போதுமானதாக இல்லை. பற்றாக்குறை இருந்து வருகிறது.
இந்நிலையில் ஊரை ஒட்டி உள்ள தோட்ட விவசாயம் செய்பவர்கள், மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீரை பைப்புகள் மூலம் திருடி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
எப்போதும் திறந்து விடப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2 மணி நேரம் என்பது தற்போது ஒரு மணி நேரம் கூட சப்ளை இல்லாமல் மக்கள் தவியாய் தவிக்கின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பல்வேறு புகார்களுக்கு இடையில் சில நாட்கள் மட்டும் விவசாயத்திற்கு தண்ணீர் எடுப்பதை நிறுத்தி வைத்திருந்தனர். ஓரளவிற்கு குடிநீர் சப்ளை சீராக வழங்கப்பட்டது.
மறுபடியும் குடிநீரைத் திருடி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவது தொடர்வதால், மீண்டும் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீரை திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
சேதமடைந்த வேகவதி ஆற்று பாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
-
ரூ.10 லட்சத்தில் அமைக்கும் சிமென்ட் சாலை பணி துவக்கம்
-
சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த சவீதா கல்வி நிறுவன பேராசிரியர்கள்
-
எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு
-
மருத்துவன்பாடி ஏரி கால்வாய் சீரமைப்பு
-
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு