வன உயிரின வார விழா
விருதுநகர்: ராஜபாளையம் அய்யனார்கோவில் மலைவாழ் மக்கள் கிராமத்தில் வன உயிரின வார துவக்க விழா நடந்தது.
உதவி வனப் பாதுகாவலர் ஞானப்பழம் வரவேற்றார். பகிர்வுகள் அறக்கட்டளை சார்பில் விஜயராணி மீனாட்சி, வனப்பாதுகாப்பில் மலைவாழ் மக்களின் பங்கு குறித்தும், வனவிலங்குகள் அறக்கட்டளையின் சார்பில் செல்வராம் ராஜா வனவிலங்கு பாதுகாப்பு குறித்தும், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் காட்டுத்தீ ஏற்படா வகையில் செயல்படுவது குறித்தும் பேசினர்.அய்யனார்கோவில் மலைவாழ் மக்கள், வன உயிரின ஆர்வலர்கள், தன்னார்வலர் தொண்டு நிறுவனத்தினர் வனத்துறையினர் கலந்து கொண்டனர். ராஜபாளையம் வனச்சரக அலுவலர் சரண்யா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சேதமடைந்த வேகவதி ஆற்று பாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
-
ரூ.10 லட்சத்தில் அமைக்கும் சிமென்ட் சாலை பணி துவக்கம்
-
சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த சவீதா கல்வி நிறுவன பேராசிரியர்கள்
-
எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு
-
மருத்துவன்பாடி ஏரி கால்வாய் சீரமைப்பு
-
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு
Advertisement
Advertisement