பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்

தர்மபுரி : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை வரவேற்று, த.வெ.க., சார்பில் பேனர் வைக்கப்பட்டது.


தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, தர்மபுரி மாவட்டத்துக்கு சென்றார். பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட காரிமங்கலத்தில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சேர்ந்த இளைஞரணி அமைப்பாளர் செல்வம், என்பவரும், தன் புகைப்படத்துடன் பழனிசாமியை வரவேற்று பேனர் வைத்துள்ளார். பேனரின் ஒரு முனையில், விஜய் தலையில் பச்சை துண்டுடன் கை கூப்பி வணங்கும் படமும், மறுமுனையில் பழனிசாமி, பச்சை துண்டுடன் இருக்கும் படமும் இருந்தது.


Latest Tamil News

இது குறித்து, கூறுகையில், ''கரூர் சம்பவத்தில், உடனடியாக, த.வெ.க.,விற்கும், தலைவர்
விஜய்க்கும் ஆறுதல் கூறி, பொது வெளியில் உண்மையை கூறியவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான். அவர், எங்கள் பகுதிக்கு வந்ததால், அவருக்கு நன்றி கூறும் விதமாக பேனர் வைத்தேன். இதற்கும், த.வெ.க., தலைமைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை,'' என்றார்.


இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு அரூரில் பழனிசாமி பிரசாரம் செய்து விட்டு, காரிமங்கலம் சென்றபோது, அவரை வரவேற்று, அ.தி.மு.க., கொடிகளுடன் த.வெ.க., கொடிகளும் இருந்தன. விசாரித்தபோது, சாலையோரம் நின்றிருந்த இரு சிறுவர்கள், த.வெ.க., கொடியை பிடித்தபடி, பழனிசாமியை வரவேற்றது தெரிந்தது. அவர்கள் யார் என விசாரித்து வருவதாக அ.தி.மு.க.,வினர் கூறினர

Advertisement