வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கி பிரமாண்டமாக வளர்கிறது புதிய கோள்

வாஷிங்டன்:ஒவ்வொரு வினாடியும், 600 கோடி டன் பொருட்களை விழுங்கி, மிக பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோளை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா மற்றும் உலகின் மற்ற விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலத்தில் உள்ளவற்றை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், 2008ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இளம் கோளுக்கு 'சா 1107 - 7626' என்று பெயர் சூட்டப்பட்டது. சாதாரணமாக ஒரு கோள், ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும். உதாரணத்துக்கு நம் பூமியானது, சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது .
ஆனால், இந்த புதிய கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.
மேலும், இது வளி மண்டலத்தில் துாசு மற்றும் பிற பொருட்களின் மோதல்கள் அல்லது இணைவதன் வாயிலாக உருவாகவில்லை.
இந்நிலையில், கடந்த சில மாதங்களில், இந்த இளம் கோள், அகோர பசியுடன், கண்டமேனிக்கு கிடைத்ததை எல்லாம் விழுங்கி வருகிறது.
இவ்வாறு அகோர பசியுடன் ஒரு கோள் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இக்கோள் ஒவ்வொரு வினாடியும், தன் சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் துாசி மற்றும் வாயு பொருட்களை தன்னுள் ஈர்த்து விழுங்கி வருகிறது.
மைல்கல் இந்த அளவு மற்றும் வேகம், இதுவரை பார்த்திராத ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பொதுவாக, நட்சத்திரங்களை சுற்றும் கோள்கள் மட்டுமே இவ்வாறு பொருட்களை சேர்த்து வளர்ச்சியடையும் என கருதப்பட்டது.
ஆனால், விண்வெளியில் தனியாக உள்ள ஒரு கோள் இவ்வளவு வேகமாக வளர்வதை பார்ப்பது என்பது பொதுவான புரிதலை மாற்றியமைப்பதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
'சா 1107 - 7626 ' கோளின் தீவிர வளர்ச்சி, நட்சத்திரங்கள் உருவாகும்போது நடப் பது போலவே அதன் காந்தபுலத்தால் துாண்டப்படுகிறது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இக்கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல் லாக பார்க்கப்படுகிறது.
மேலும், இது பற்றி கூடுதல் தகவல்களை பெற, விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.











மேலும்
-
கோல்ட்ரிப் சிரப் பயன்பாடு அமைச்சர் மறுப்பு
-
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அமைச்சர் சிறப்பு அதிகாரி கைது
-
ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் எஸ்.ஐ.டி., விசாரணை
-
தசராவால் குப்பை அதிகரிப்பு சுற்றுப்புற சூழல் கடும் பாதிப்பு
-
ஆந்திர அமைச்சருக்கு பிரியங்க் கார்கே பதிலடி
-
அண்ணன் மகனின் நிலம் 'ஸ்வாகா': நகர ஆயுதப்படை டி.எஸ்.பி., சிக்கினார்