கேஸ் சிலிண்டர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

நாமக்கல்: தென் மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
தென்மண்டல கேஸ் டாங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகம்,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மத்திய அரசின் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுடன் 2018-23 வரை ஒப்பந்த அடிப்படையில் கேஸ் டேங்கர் லாரிகள் கேஸ் சிலிண்டர் சப்ளை அளித்து வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள், 2025-30 ஆண்டுக்கான புதிய ஒப்பந்த டெண்டர் அறிவிக்கப்பட்டது. கடந்த ஒப்பந்தந்தத்தில் 5514 லாரிகளுக்கு டெண்டரில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டிருந்தது. தற்போது புதிய டெண்டரில் பங்கேற்க 3478 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நைடைபெற்றது.அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், டெண்டரில் பங்கேற்ற லாரிகளுக்கு, ஆயில் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா கூறியதாவது:
2025-30 புதிய ஒப்பந்த டெண்டரில் பங்கேற்ற அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை முன் வைத்து
தென்னிந்திய கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று கூறினார்.
மேலும்
-
காவல் என எழுதப்பட்டு உலா சினிமா சூட்டிங் ஜீப் பறிமுதல்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
-
தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது * பா.ஜ., நயினார் நாகேந்திரன் சாடல்
-
சைபர் குற்றங்களில் பிற மாநிலங்களை முந்திய தமிழகம் 3 ஆண்டுகளில் 1,759 பேர் சிக்கினர்
-
பா.ஜ.,வுடன் கைகோர்த்து தேர்தல் கமிஷன்வாக்காளர்கள் பட்டியலில் தில்லுமுல்லு சட்டசபை காங்., தலைவர் குற்றச்சாட்டு
-
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் தமிழகம் முதலிடம்