காவல் என எழுதப்பட்டு உலா சினிமா சூட்டிங் ஜீப் பறிமுதல்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் சாலை தெரு ரோமன் சர்ச் பகுதியில் காவல் என எழுதப்பட்ட பழைய போலீஸ் ஜீப் ஒன்றை பார்த்ததும் போக்குவரத்து போலீசார் அந்த ஜீப்பை மடக்கிப் பிடித்தனர். அதனை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று ஆய்வு செய்தனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை போலீசார் பயன்படுத்திய ஜீப் போன்று இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்த வாகனத்தை டிராபிக் போலீஸ் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் சினிமா சூட்டிங்கிற்காக வந்த வாகனம் என்று தெரிய வந்துள்ளது.

தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் ஷூட்டிங் ராமநாதபுரம் பகுதியில் நடந்து வருவதாகவும், அந்த சூட்டிங்கில் பயன்படுத்தப்பட்ட வாகனம் எனவும் தெரிய வந்தது. ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு ஜீப்பை எடுத்து செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement