ரூ.3 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரி கைது

திருப்பூர்; தாராபுரத்தில், நிரந்தர மின் இணைப்பு பெற, 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், அனந்தவனத்தை சேர்ந்தவர் சிவசுப்ரமணியம், 60; விவசாயி. புதிய வீடு கட்டுவதற்கு, மனைவி பெயரில், தற்காலிக மின் இணைப்பு பெற்றிருந்தார். வீடு கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், தற்காலிக மின் இணைப்பை, நிரந்தர மின் இணைப்புக்கு மாற்ற, தாராபுரம் வடக்கு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இப்பணிக்கு வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், 56 என்பவர், 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டார். இதுகுறித்து சிவசுப்ரமணியம் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அறிவுரைப்படி, லஞ்ச பணத்தை நேற்று காலை அலுவலகத்தில் இருந்த ஜெயக்குமாரிடம் கொடுத்தார். அங்கு மறைந்து இருந்த டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ஜெயக்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் கணக்கில் வராத, 13 ஆயிரம் ரூபாயையும் கைப்பற்றினர். பின், அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும்
-
கமாண்டோ வீரர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி
-
சேலத்தில் நாளை நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்
-
கொழுக்குமலை ஜீப் சவாரியில் முறைகேடு அக்.21ல் காங்., போராட்டம் நடத்த முடிவு
-
திருக்குறள் திருப்பணி பயிற்சி மையம் மேட்டூர் பள்ளியில் நாளை துவக்கம்
-
மந்தையம்மன் கோயில் திருவிழா
-
ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகம் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் குமுறல்