மக்களின் நீராதாரமான ஊருணி கழிவுநீர் குளமாக மாறிய அவலம்

காரைக்குடி : காரைக்குடியில், மக்களின் நீர் ஆதாரமாக இருந்த செஞ்சை ஊருணி, குப்பை, கழிவு கலந்து, கழிவுநீர் குளமாக காட்சியளிக்கிறது.
காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டில் உள்ள செஞ்சை ஊருணி 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக இருந்தது. ஊருணியில் தண்ணீர் எடுத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊருணியின் முக்கிய நீர் ஆதாரமான வரத்து கால்வாய்கள் தடைபட்டு தண்ணீர் வரத்து நின்று போனது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊருணி தூர்வாரப்படவில்லை. சுற்று பகுதியில் உள்ள சாக்கடை கழிவு ஊருணிக்குள் விடப்படுகிறது. இதனால் செஞ்சை ஊருணி, கழிவுநீர் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதார கேடு நிலவு அதோடு நீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
கழிவுநீரை அகற்றி, குளத்தை தூர்வாரி முறையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று கோரிக்கை எழுந்து வருகிறது.
மேலும்
-
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை
-
போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது