கமுதியில் பாரதியார் நினைவு தினம்: ஓவியக் கண்காட்சி
கமுதி : கமுதி கவுரவ தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பாபு ஓவிய பயிற்சி பள்ளி சார்பில் ஓவிய கண்காட்சி, ஓவியப்போட்டி, மகாகவி பாரதியார் 104வது நினைவு தினம் முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.
சங்க தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். பள்ளியின் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் கண்ணதாசன் வரவேற்றார். தாசில்தார் ஸ்ரீராம் துவக்கி வைத்தார். தமிழக நல்லாசிரியர் விருது பெற்ற கிருஷ்ணமூர்த்தி, நுாலகர் கண்ணதாசன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பட்டிமன்ற பேச்சாளர் துரைப்பாண்டியன், நடிகர் ஹலோ கந்தசாமி கருத்தரங்கம் நடந்தது. போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் வான் தமிழ் இளம்பருதி, மாணவர்கள், மக்கள் பங்கேற்றனர். துணைத் தலைவர் அருள்ராஜ் நன்றி கூறினார்.
மேலும்
-
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை
-
போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது