தி.மு.க., ஆட்சி மாற இன்னும் 6 அமாவாசை தான் உள்ளது; முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆரூடம்

ஒட்டன்சத்திரம் : தி.மு.க., ஆட்சி மாறுவதற்கு இன்னும் ஆறு அமாவாசை தான் உள்ளது என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க., கிழக்கு, மேற்கு, நகரம் சார்பில் நடந்த பூத்கள், கிளைகள் வாரியாக வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: தி.மு.க., 520 பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்துள்ளது. கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருவது ஸ்டாலின் ஆட்சியின் சாதனையாகும்.தி.மு.க., ஆட்சி மாறுவதற்கு இன்னும்6அமாவாசை தான் உள்ளது. 2026 ல் அ.தி.மு.க., ஆட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜ் தலைமை வைத்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி முன்னிலை வகித்தனர்.ஐ.டி.விங்க் மாவட்டத் துணைத் தலைவர் சீரா பாலா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீர மணிகண்டன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்சுமித்ராரகுபதி, வக்கீல் அணி பொருளாளர் சுப்பிரமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பிரபு,வார்டுசெயலாளர் முகமது அப்துல்லா கலந்து கொண்டனர். இதேபோன்று நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு நகரச் செயலாளர் நடராஜன், தொப்பம்பட்டியில் ஒன்றிய செயலாளர்கள் கருப்புசாமி, முருகேசன் தலைமைவகித்தனர்.
மேலும்
-
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை
-
போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது