பைக் வாங்க ஆசை; சங்கிலி பறித்தவர் கைது
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் உயர்ரக மோட்டார் பைக் வாங்கும் ஆசையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டி செல்வி 50. மதுரை ரோட்டில் நடந்து சென்றபோது அவ்வழியே வந்த இளைஞர் பாண்டி செல்வியின் கழுத்தில் கிடந்த ஒன்பது பவுன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பி ஓட முயன்றார்.
சங்கிலி அணிந்திருந்த பெண் கூச்சலிட்டு, சங்கிலியை பறிக்க விடாமல் தடுத்தார்.
ஆள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் வெங்கடாஸ்திரி கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டி 21 என்பதும், உயர் ரக மோட்டார் பைக் வாங்க ஆசைப்பட்டு, பணத்திற்காக சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை
-
போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது
Advertisement
Advertisement