பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் ஆபத்தை ஏற்படுத்தும் பஸ் ஸ்டாப்

பரமக்குடி : பரமக்குடி ஐந்து முனை ரோடு பகுதியில் ஆபத்தான முறையில் பஸ்ஸ்டாப் செயல்படும் நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சியில் ஐந்து முனை ரோடு பிரதானமாக உள்ளது. இங்கு மதுரை, ராமநாதபுரம், இளையான்குடி, முதுகுளத்துார் மற்றும் நகர் பகுதி செல்லும் பாதைகள் உள்ளன. இந்நிலையில் இளையான்குடி ரோடு பகுதியில் பஸ் ஸ்டாப் உள்ள சூழலில் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. இங்கு வாகனங்களை பார்க்கிங் செய்வதுடன் அருகில் வாறுகால் உள்ளதால் மக்கள் நிற்க பயப்படு கின்றனர்.
இதனால் ஐந்து முனை ரோடு பஸ் திரும்பும் இடத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. குறுகலான இடத்தில் எதிர் எதிர் திசையில் பஸ்கள் வரும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் டூவீலர் மற்றும் பாதசாரிகள் நடப்பதற்கு போதிய வழியின்றி டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிக்கின்றனர்.
எனவே பஸ் பயணிகள் மற்றும் ரோட்டில் செல்வோருக்கு இடையூறு இன்றி பயணம் தொடர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை
-
போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது