கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் :தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசங்கர் தலைமை வகித்தார்.
மாவட்டத் துணை தலைவர் திருலோக சந்தர், மாவட்ட பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் விஜயராமலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் கூட்டுறவுத்துறை அலுவலகங்களில் பணி நேரம் முடிந்து மாலை 6:00 மணிக்கு மேல் கூகுள் மீட் மூலம் காணொலி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இது இரவு வரை நீடிப்பதால் அலுவலர்கள் தங்கள் பணி நேரத்தை கடந்து வேலை செய்ய வேண்டியுள்ளது. தனியார் தொழில் முனைவோர் மூலம் நடத்தப்படும் முதல்வர் மருந்தகங்களுக்கு கூட்டுறவு சார்ப்பதிவாளர்களை பயன்படுத்த வேண்டும்.
அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்காமல் தாயுமானவர் திட்டத்தை இரு தினங்களில் செயல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுப்பதை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். முத்துலதா நன்றி கூறினார்.
மேலும்
-
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை
-
போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது