இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமம் ரத்து

சென்னை: 'ஸ்ரீசன் பார்மா' இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதுவரை 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு, அவர்கள் உட்கொண்ட 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தான் காரணம் என்பது தெரியவந்தது. இந்த மருந்து தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, 'ஸ்ரீசன் பார்மா' இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்று (அக் 13) ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விசாரணை
இதற்கிடையே, இருமல் தயாரிக்கும் ஆலைக்கு, அதன் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.










மேலும்
-
அமைச்சர்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை: சென்னை ஐகோர்ட் வேதனை
-
யாருடனும் மோதலை விரும்பவில்லை: ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி பேட்டி
-
ஜல்லிக்கட்டு, முத்தலாக் வழக்குகளில் தீர்ப்பை வழங்கிய அஜய் ரஸ்தோகி!
-
டி.ஆர்.பாலுவின் அரசியல் வரலாற்றை மக்கள் முன் வைக்க உள்ளோம்: சொல்கிறார் அண்ணாமலை
-
தென் ஆப்ரிக்காவில் சோகம்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி
-
ஆபரணத்தங்கம் காலையில் ரூ.200, மாலையில் ரூ.440 அதிரடி உயர்வு; சவரன் விலை ரூ.92,640