என்.எஸ். எஸ்., மாணவர்களுக்கு பரிசு
வாலாஜாபாத், வாலாஜாபாத், அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வாலாஜாபாதில் இயங்கும் அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
இந்த மாணவர்களின் சேவை ஆர்வத்தை பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசு வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி, வாலாஜாபாத் லயன்ஸ் சங்கம் சார்பில் நேற்று நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் சசிக்குமார் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதல் துணை கவர்னர் பூர்ணசந்திரன், காஞ்சிபுரம் மாவட்ட வியாபாரிகள் சங்க செயலர் வெங்கடேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், சமூக சேவையில் மாணவர்களின் சிறந்த பங்களிப்பை பாராட்டி பரிசுகள் மற்றும் சீருடை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
உலக உணவு தினத்தையொட்டி கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாபாத் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்தது.
இதில், 30 கர்ப்பிணியருக்கு காய்கறிகள், பழம், அரிசி பருப்பு வகைகள் தொகுப்பாக வழங்கப்பட்டன.
மேலும்
-
ரூ.3 ஆயிரம் கோடிக்கு உட்கட்டமைப்பு பணிகள் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
-
மே.வங்கத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி
-
'பட்ஜெட் நிதியை செலவு செய்வதில் அதிகாரிகளுக்கு அலட்சியம் கூடாது'
-
ஆர்ட் அகாடமியில் தேசிய ஓவியப்போட்டி
-
'டிஜிட்டல்' ஆயுள் சான்று பெற ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்
-
கோவை - சென்னை 'வந்தே பாரத்'தில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?