'நாளந்தா கோப்பை' விளையாட்டு போட்டி
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளி சார்பில் நடத்தப்படும் 'நாளந்தா கோப்பை' 2025 -2026ம் ஆண்டிற்கான மாநில அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், 34 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தலைமை வகித்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். சி.இ.ஓ.,க்கள் முனிராஜ், கோபாலப்பா, மாவட்ட இளைஞர் நல அலுவலர் ராஜகோபால் பங்கேற்றனர்.
விழாவில், கிருஷ்ணகிரியில் முதலாவது பிக்கிள் பால் மைதானம், நாளந்தா வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதில், பள்ளி நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், பள்ளி நிர்வாக இயக்குனர்கள் வழக்கறிஞர் கவுதமன், டாக்டர் புவியரசன், பள்ளி கல்வி இயக்குனர், பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். இதன்மூலம், மாணவர்கள் புதிய விளையாட்டு திறன்களை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும், விளையாட்டு மனப்பான்மையையும், ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் என்றும் பள்ளி நிறுவனர் தெரிவித்தார்.
மேலும்
-
அமைச்சர்களுடன் சாப்பிடுவது ஒரு குத்தமாய்யா? 'ஓய்வு' வதந்தியால் சித்தராமையா ஆவேசம்!
-
போக்சோ நீதிமன்ற நீதிபதிகளுக்கு பயிற்சி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
-
பட்டியலினத்தவருக்கு வீடு அமைக்கும் திட்டம் உயர்நீதிமன்றம் அவகாசம்
-
கோயில் மாநகர் மதுரை: தலைமை நீதிபதி பெருமிதம்
-
3.88 கி.மீ., தொலைவிற்கு பிரமாண்டமாய் இந்திரா - ராஜிவ் சதுக்க உயர்மட்ட மேம்பாலம்
-
எங்களுக்கு மட்டும் இல்லை பண்டிகை முன்பணம் ஆசிரியர் பயிற்றுநர்கள் குமுறல்