ஜி.ஹெச்.,ல் விழிப்புணர்வு



ஊத்தங்கரை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், சி.பி.ஆர்., விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமை வகித்து. சி.பி.ஆர்., விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தார். இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


சி.பி.ஆர்., என்பது, மாரடைப்பு ஏற்படும் நேரத்தில், இதயம் துடிப்பதை நிறுத்தும் போது செய்யப்படும் அவசர உயிர்காக்கும் செயல் முறை. இதய துடிப்பை சீராக்கவும், மூளைக்கு ரத்த ஓட்டத்தை தொடரவும், மார்பு பகுதிக்கு அழுத்தம் கொடுப்பது மற்றும் செயற்கை சுவாசம் கொடுப்பதுவும் ஆகும். இதை அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக்கூறி, விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

Advertisement