தேர்தலில் சீட்டுக்காக தி.மு.க.,வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை திருமாவளவன் தர்மபுரியில் பேச்சு
தர்மபுரி, ''தேர்தலில் சீட்டுக்காக, தி.மு.க.,வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை,'' என, தர்மபுரியில் நடந்த வி.சி., கட்சி முப்பெரும் விழா பொதுக்
கூட்டத்தில், தலைவர் திருமாவளவன் பேசினார்.மேலும் அவர் பேசியதாவது:
தர்மபுரி மாவட்டம் சார்பில், 2026 சட்டசபை தேர்தலுக்கு தேர்தல் நிதியாக, ஒரு கோடி ரூபாய் தருவதாக தெரிவித்தனர். ஏற்கனவே அரூரில் நடந்த கூட்டத்தில், 30 லட்சம் ரூபாய் கொடுத்தனர். தர்மபுரியில் நடந்த கூட்டத்தில், 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். இன்னும், 20 லட்சம் ரூபாயை விரைவில் கொடுப்பதாக மாவட்ட செயலர்கள் தெரிவித்துள்ளனர். வி.சி., தமிழகத்தில் இன்று தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக மாறியுள்ளது.
மக்களுக்காக எதையும் செய்யாமல், நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என பலர் கிளம்பியுள்ளனர். சமத்துவத்தை கட்டமைப்பது தான் நமது கடமை, முதல்வர் நாற்காலி தேவையில்லை. சீட்டுக்காக தி.மு.க.,வுடன் கூட்டணியாக ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை. அதைவிட கூடுதலாக சீட்டு கொடுப்பதாக பலர் கூறினர். ஆனால், அது எங்களுக்கு தேவையில்லை. தற்போது நாட்டில் இருக்கும் பிரச்னைகளுக்கு காரணமான பா.ஜ.,வை வீழ்த்த, ராகுல் தலைமையிலான காங்., மற்றும் இடது
சாரி கூட்டணி நமக்கு தேவை.
நடிகர்கள் கட்சி தொடங்கினால் நம்மை சீண்டுகிறார்கள். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த
போதும், தற்போது விஜய் அரசியலுக்கு வந்தபோதும், நான் பதற்றமடைவதாக கூறுகின்றனர். நம்மை குறைத்து மதிப்பிடுகின்றனர். விஜய் கட்சி தொடங்கியதும், தலித்துகள் அவர் பின்னால் போகிறார்கள் என பேசுகின்றனர். கட்சியில் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுத்ததும் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புடன் சேர்ந்து சங்கியாக மாறிவிட்டனர். வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியை தோற்கடிப்பதே த.வெ.க., - அ.தி.மு.க., கட்சிகளின் நோக்கம்; அதுதான் பா.ஜ., நோக்கமாக உள்ளது. திராவிட அரசியலுக்கு வி.சி., தான் பாதுகாப்பு அரணாக உள்ளது. இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசிய
தாவது:
லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் மணி வெற்றி பெற திருமாவளவன் உத்தரவின்படி, கட்சி நிர்வாகிகள் உழைத்தனர். மருத்துவர் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்தபோது, அவரது மகன் அவரை கோபப்படுத்தும் வகையில், புதிய நிர்வாகிகளை நியமிப்பது, கட்சியை உடைப்பது போன்ற பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். பெற்ற தாய், தகப்பனை காப்பாற்றாதவர்கள் உரிமை மீட்பு பயணம் செல்கின்றனர். அதனால் என்ன பயன். ஆனால், உங்கள் தலைவர் அப்படியில்லை. கட்சியையும்,
உங்களையும் காப்பாற்றுவார். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி: இபிஎஸ் ஆவேச பேட்டி
-
நடிகர் விஜய் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்த முதல்வர் ஸ்டாலின்!
-
இன்று 6 மாவட்டம்; நாளை 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்
-
7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
மும்பை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி: 12 மணி நேரம் பஸ்சில் காத்திருந்த 500 மாணவர்கள்