2 மாணவியர் மாயம்



தலைவாசல் தலைவாசல், வேப்பம்பூண்டியை சேர்ந்த, 16 வயது சிறுமி, அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று காலை, 7:45 மணிக்கு பள்ளிக்கு செல்வதாக புறப்பட்டார். ஆனால் பள்ளிக்கு வரவில்லை என, அவரது பெற்றோரிடம், ஆசிரியர் கூறியுள்ளார். அதேபோல் தலைவாசல் அருகே நாவலுாரை சேர்ந்த, 16 வயது சிறுமியும், அதே பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். அவரும், பள்ளிக்கு வரவில்லை. தோழிகளான இருவரும் வராததால், வீரகனுார் போலீசார் தேடுகின்றனர்.பேச முடியாதவர்

ஜலகண்டாபுரம், அரியாம்பட்டியை சேர்ந்த, வாய் பேச முடியாதவர் சின்னகவுண்டர், 48. இவர் அண்ணன் மகன் வெள்ளையன் பராமரிப்பில் உள்ளார். கடந்த செப்., 29ல் வீட்டிலிருந்து வெளியே சென்ற சின்னகவுண்டர், வீடு திரும்பவில்லை. நேற்று வெள்ளையன் புகார்படி, ஜலகண்டாபுரம் போலீசார்
தேடுகின்றனர்.---------------------

Advertisement