தோல்வியிலிருந்து பாடம் கற்கிறோம்: சொல்கிறார் ஸ்ரீதர் வேம்பு

சென்னை: ''நாங்கள் மற்றவர்கள் மீது பழி சுமத்துவதை விரும்பவில்லை. தோல்விகளில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொள்கிறோம்'' என ஸோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தனியார் கல்லூரியின் 40வது பட்டமளிப்பு விழாவில் பேசியதாவது: மாணவர்களிடம் முயற்சிகள் மற்றும் கற்றுக்கொள்ளும் திறன் இருக்க வேண்டும். இந்தியாவின் சுயசார்பு நோக்கிய பயணத்தின் அடையாளமாக இருக்க வேண்டும் . நாங்கள் மற்றவர்கள் மீது பழி சுமத்துவதை விரும்பவில்லை. தோல்விகளில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொள்கிறோம்.
இது நமது திறமைகளை நீண்ட காலம் வெளிப்படுத்த உதவும். இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் இருக்கின்றனர். இவர்கள் மட்டுமே சுயசார்பு நோக்கிய பயணத்தில் உள்நாட்டிலேயே தொழில்நுட்பத்தை வளர்க்க போதுமானது. நாங்கள் குறை சொல்வதை விரும்பவில்லை என்பதால், இவை அனைத்தும் சாத்தியமானது. இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு பேசினார்.
மேலும்
-
பயங்கரவாதிகளிடம் இரக்கம் காட்டக்கூடாது: அமித் ஷா
-
ஹிந்தியை தடை செய்யும் மசோதா வெறும் வதந்தி அல்ல; சொல்கிறார் அண்ணாமலை
-
'தினமலர்' எனது தமிழ் ஆசிரியர்
-
‛நிறைய எழுது; படிப்பிலும் கவனம் செலுத்து' என்று என் வாழ்வை வளமாக்கியவர் டி.வி.ராமசுப்பையர்
-
ஹெலிகாப்பட்டரில் எடுத்த படங்கள்! விற்றுத்தீர்ந்த பிரதிகள்!
-
சட்டசபையில் நயினாருக்கு இன்ப அதிர்ச்சி: புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!