ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது: சவரனுக்கு ரூ.320 உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (அக் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 14) ஆபரண தங்கம் கிராம் 11,825 ரூபாய்க்கும், சவரன் 94,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக் 15) தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 11,860 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 94,880 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 207 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,900க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும்
-
பயங்கரவாதிகளிடம் இரக்கம் காட்டக்கூடாது: அமித் ஷா
-
ஹிந்தியை தடை செய்யும் மசோதா வெறும் வதந்தி அல்ல; சொல்கிறார் அண்ணாமலை
-
'தினமலர்' எனது தமிழ் ஆசிரியர்
-
‛நிறைய எழுது; படிப்பிலும் கவனம் செலுத்து' என்று என் வாழ்வை வளமாக்கியவர் டி.வி.ராமசுப்பையர்
-
ஹெலிகாப்பட்டரில் எடுத்த படங்கள்! விற்றுத்தீர்ந்த பிரதிகள்!
-
சட்டசபையில் நயினாருக்கு இன்ப அதிர்ச்சி: புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!