அருணிமா குமார்: உலகளவில் குச்சிபுடியின் பிரதிநிதி



அருணிமா குமார், இந்தியாவின் முன்னணி குச்சிபுடி நடனக் கலைஞர்களில் ஒருவர். 1978 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், உலகளவில் குச்சிபுடி நடனத்தை கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்குவகிக்கிறார்.தற்போது 47 வயதாக உள்ள இவர், 35 ஆண்டுகளுக்கும் மேலாக குச்சிபுடி நடனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
Latest Tamil News
அருணிமா குமார் தனது நடன பயணத்தில் உலகளவில் 700க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளில் பங்கேற்றுள்ளார். இந்திய பாரம்பரிய கலைகளை மேம்படுத்துவதில் மட்டுமல்ல, சமூக சேவைகளிலும் அவர் அக்கறை கொண்டவர். சிறிய ஊர்கள், பள்ளிகள் மற்றும் கலைமையங்களில் பாரம்பரிய கலைகளை பரப்பும் நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
Latest Tamil News
அவரது கலைக்கட்டமைப்பில் பாரம்பரிய குச்சிபுடி நடனத்தின் நுட்பத்தையும், அதனால் கிடைக்கும் காதல், உணர்வு, கதை சொல்லும் திறன் ஆகியவற்றையும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி சிறப்பாக தெரிகிறது. அருணிமா குமார் நடனம் மட்டுமல்ல, கலைக் கருத்துகளை, சமூக உணர்வுகளை கலந்துரையாடும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
Latest Tamil News
அருணிமா குமாரின் சாதனைகளுக்கு உலகளவில் பெருமைமிக்க பிரித்தானிய எம்பையர் மெடல் வழங்கப்பட்டு, குச்சிபுடி நடனத்தின் சிறப்பையும், இந்திய கலாச்சாரத்தின் பெருமையையும் உலகளவில் அங்கீகரித்தது. இதுவே உலகில் முதல் முறையாக ஒரு குச்சிபுடி நடனக் கலைஞருக்கு வழங்கப்பட்ட முக்கியமான கௌரவம்.

தற்போது லண்டனில் வசித்து வருகிற அருணிமா குமார்,குச்சிபுடியின் வாழும் வரலாறு; அவரது கலைப்பயணம் பாரம்பரியத்தை காப்பாற்றி, உலகளவில் இந்திய கலாச்சாரத்தின் ஒளியை பரப்பும் பணியில் அமைந்துள்ளது. கலை, சமூக சேவை, மற்றும் உலகளாவிய அங்கீகாரம் ஆகியவற்றின் மூலமாக அவர் கலைஞர்களுக்கான முன்னோடியாகவும் மற்றும் இந்திய கலையின் பெருமையாகவும் விளங்குகிறார்.

-எல்.முருகராஜ்

Advertisement