தமிழகத்தில் 18 நாட்களில் மழைக்கு 20 பேர் பலி

சென்னை: தமிழகத்தில், இம்மாதம் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, மழைக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. மாநிலம் முழுதும் சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது.
சில மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளது. இம்மாதம் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, மழைக்கு, 10 பெண்கள், எட்டு ஆண்கள், இரண்டு குழந்தைகள் என, மொத்தம் 20 பேர் இறந்துள்ளனர்.
அதிகபட்சமாக கடலுார் மாவட்டத்தில் ஐந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று பேர் இறந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மாநிலம் முழுதும் மழையில், 435 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன; 267 கால்நடைகள் இறந்துள்ளன.
தேனி மாவட்டத்தில் 7,500, ராணிப்பேட்டை மாவட்டத்தில், 3,800 என, 11,300 கோழிகள் இறந்துள்ளன. 45 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும்
-
போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி; எனது அதிர்ஷ்டம் என பெருமிதம்!
-
சரவெடி தீபாவளி; இந்தாண்டு ரூ.7,000 கோடி பட்டாசுகள் விற்பனை
-
சமூக பணியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கிறது 'தினமலர்' நாளிதழ்
-
ஒவ்வொரு வாசகரையும் இப்போது போல் நுாறாண்டுகள் கடந்தும் 'தினமலர்' திருப்திபடுத்தும்
-
டில்லியில் விமானத்தில் பற்றி எரிந்த திடீர் தீ… அலறிய பயணிகள்
-
பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கிறது ரயில்வே அமைச்சகம்