ஒவ்வொரு வாசகரையும் இப்போது போல் நுாறாண்டுகள் கடந்தும் 'தினமலர்' திருப்திபடுத்தும்

வணக்கம். நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 'தினமலர்' நாளிதழ் வாசகர். செய்திகள் அனைத்தையும் தினமலர் அணுகும் முறை வித்தியாசமானது; அச்செய்திகளை வாசகர்களுக்கு படைக்கும்விதமோ பெரும் சுவாரஸ்யம் கொண்டது!

குறிப்பாக, 'டீ கடை பெஞ்ச்' பகுதியில் பேசப்படும் தகவல்கள் சமூக மாற்றத்திற்கு வித்திடுகின்றன. வாரமலர், சிறுவர் மலர் உள்ளிட்ட அனைத்து இணைப்பு இதழ்களையும் தினமலர் வாசிக்கும் அதே ஆர்வத்தோடு வாசித்து வருகிறேன்!

குறிப்பாக, 'ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும்' என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலானது வாரமலர் தாங்கிவரும் சிறுகதைகள். இதோடு, 'அந்துமணி பதில்கள்' உள்ளிட்ட மற்றவையும் என் ரசனைக்கு விருந்து படைக்கின்றன!

நுாலகர்களின் சேவையை உணர்ந்த தினமலர், நவம்பர் 22, 2022 'பட்டம்' மாணவர் பதிப்பில், 'ஐந்து விதிகள்' எனும் தலைப்பில் 'நுாலகரின் பணி' பற்றிய எனது கட்டுரையை வெளியிட்டது. இதை, நூலகர் சமூகத்திற்கான கவுரவமாக கருதுகிறேன்.

இப்படியாக சமூகப்பணியாற்றி வரும் தினமலர் நாளிதழ், 75வது ஆண்டில் நுழைந்திருக்கிறது என்பதில் உள்ளபடியே பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். ஒவ்வொரு வாசகரையும் இப்போது போல் நுாறாண்டுகள் கடந்தும் தினமலர் திருப்திபடுத்தும் என்று நம்புகிறேன்.

முனைவர் இரா.கோதண்டராமன்,
கல்லுாரி நுாலகர், சென்னை.

Advertisement