போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி; எனது அதிர்ஷ்டம் என பெருமிதம்!

பனாஜி: விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். அவர் இந்திய கடற்படையின் துணிச்சலான வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது எனது பாக்கியம் என தெரிவித்தார்.
இந்திய கடற்படையின் துணிச்சலான வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது தனது அதிர்ஷ்டம். இந்த தருணம் மறக்கமுடியாதது. இந்த காட்சி நம்பமுடியாதது. இந்தியா மீதான நமது வீரர்களின் நேசம் தான், நமது கப்பல்கள் விமானங்களின் பலம். கடல் நீரில் சூரியனின் கதிர்களின் பிரகாசம், துணிச்சலான வீரர்களால் ஏற்றி வைக்கப்படும் தீபாவளி விளக்குகளைப் போன்றது.
பாராட்டுக்கள்
ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிக்காக இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பாராட்டுகிறேன். கடற்படை, விமானப்படை கூட்டு முயற்சி தான்பாகிஸ்தானை விரைவாக சரணடையச் செய்தது. ஐஎன்எஸ் விக்ராந்தில் நேற்று கழித்த இரவை வார்த்தைகளில் விவரிக்க கடினமாக உள்ளது. நீங்கள் அனைவரும் எவ்வளவு அபரிமிதமான ஆற்றலையும் உற்சாகத்தையும் நிரப்பியிருந்தீர்கள் என்பதை நான் கண்டேன்.
தேசபக்தி
நேற்று நீங்கள் தேசபக்தி பாடல்களைப் பாடுவதையும், உங்கள் பாடல்களில் ஆப்பரேஷன் சிந்தூரை விவரித்த விதத்தையும் பார்த்தபோது, ஒரு ஜவான் போர்க்களத்தில் நிற்கும்போது உணரும் அனுபவத்தை எந்த வார்த்தைகளாலும் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கடந்த காலங்கள்...!
கடந்த 2014ம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக மோடி பதவியேற்றது முதல் தற்போது வரை, ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும், இந்திய பாதுகாப்பு படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
2025- விக்ராந்த் போர்க்கப்பல், கோவா.
2024- சர் கிரீக், குஜராத்.
2023- லெப்சா, ஹிமாச்சலப் பிரதேசம்.
2022- கார்கில் போர் நினைவிடம்
2021- நௌஷெரா, ஜம்மு காஷ்மீர்.
2020- லோங்கேவாலா, ராஜஸ்தான்.
2019- ரஜோரி, ஜம்மு காஷ்மீர்.
2018- ஹர்சிலில் உள்ள இந்தோ திபெத் படை, உத்தராகண்ட்
2017- குரேஸ் பிரிவு, ஜம்மு காஷ்மீர்.
2016- சும்டோ (இந்திய-சீன எல்லை),
ஹிமாச்சலப் பிரதேசம்.
2015- அமிர்தசரசில் உள்ள தோக்ராய் போர் நினைவிடம், பஞ்சாப்.
2014- லடாக்கின் சியாச்சினில் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.












மேலும்
-
தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள்: கேட்கிறார் ராகுல்
-
நடுவானில் விமானத்தின் முகப்பு கண்ணாடியில் விரிசல்: விமானி காயம்
-
தீபாவளி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்கள்
-
பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்; தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்!
-
கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: தூதர் பேட்டி
-
தீபாவளி முடிந்து சொந்த ஊர் திரும்புவோர் கவனத்திற்கு... தென் மாவட்ட மக்களுக்கு ரயில்வே அறிவிப்பு