சமூக பணியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கிறது 'தினமலர்' நாளிதழ்

'தினமலர்' நாளிதழுடன் எனது தொடர்பு, கடந்த 2001ல், ஒரு மரம் நடும் விழாவில் துவங்கியது. கடந்த 25 ஆண்டுகளில் எனது தொழில் வளர்ந்தது போல, 'தினமலர்' நிர்வாகத்துடன் எனது உறவும் வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் உலகளாவிய செய்திகள் உடனுக்குடன் வலம் வரும் இன்றைய சூழலில் கூட, காலை 7:00 மணிக்கு சூடான காபியுடன் 'தினமலர்' நாளிதழின் அனைத்து பக்கங்களையும் ஒரு பார்வை பார்த்தால் மட்டுமே அந்த நாள் திருப்தியுடன் துவங்கும் என்பது எமது குடும்பத்தின் வாடிக்கையாக உள்ளது.
ஊடக துறையில், பொதுவாக விளம்பர பிரிவும் செய்தி பிரிவும் நெருங்கிய தொடர்பில் இருக்கும். விளம்பர வருவாயை பொறுத்து செய்திகளின் நடுநிலைத் தன்மை மாறுவதை பல ஊடகங்களில் அனுதினமும் பார்க்கிறோம். ஆனால், எனது 25 ஆண்டு அனுபவத்தில், ஒரு முறை கூட, 'தினமலர்' செய்தி பிரிவு நிருபர்கள் விளம்பரம் பற்றி பேசியதில்லை. ஆட்சியில் யார் இருந்தாலும் மக்களின் குறைகளை உள்ளது உள்ளபடியே வெளியிடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
சமீபத்திய எடுத்துக்காட்டு, கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த செம்மண் திருட்டு / கனிமவள கொள்ளை பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி; பின் ஒரு நாள் 'தினமலர்' நாளிதழ் வெளியிட்ட படங்களே ஆதாரமாக வைக்கப்பட்டதும்; அதனை தொடர்ந்து நீதி அரசர்களே கள ஆய்வு செய்ததும்; இன்று அத்தகைய கனிம வள திருட்டுக்கள் முற்றிலும் நின்றதையும் பார்க்கிறோம். இதில், 'தினமலர்' நாளிதழின் பங்கு மிகப் பெரியது.
சமூக பணியில் ஈடுபடும் தனி நபர்களை தொடர்ந்து ஊக்குவித்து, படங்களுடன் செய்திகள் வெளியிட்டு, பெரிய சமூக மாற்றத்திற்கு வித்திடுவதில் 'தினமலர்' நாளிதழுக்கு நிகராக யாரும் இல்லை.
கோவையில் 'சிறு துளி' அமைப்பு செய்த நீர்நிலை புனரமைப்பு பணிகளையும், திருப்பூரில் வெற்றி அறக்கட்டளை நடத்தும் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தையும், சாதாரண தன்னார்வலர்களை கொண்டு இயங்கிய 'கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு' உள்ளிட்ட பல அறக்கட்டளைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் பணிகளை வேறு எந்த பத்திரிகையும் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்திற்கு மட்டும் வருடம் குறைந்தது 250 செய்திகள் படங்களுடன் வருவதால் மட்டுமே, இன்று அது ஒரு மக்கள் இயக்கமாக மாறி
10 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 22 லட்சம் மரங்கள் வளர்ந்து நிற்பதை பெருமையுடன் பார்க்கிறோம்.
எப்போதெல்லாம் தொழில் சூழ்நிலையில் சவால் ஏற்படுகிறதோ, அப்போது, பிரதமர் மற்றும் மாநில முதல்வரின் கவனத்திற்கு எட்டும்படி செய்தி வெளியிட்டு உதவுவதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை.
செய்தியுடன் நின்றுவிடாமல், தேசபக்தியை வலியுறுத்தும் விதமாக பல விழிப்புணர்வு கூட்டங்களை, களப்பணிகளை பெரிய பொருட்செலவில் 'தினமலர்' நிறுவனம் நடத்துவதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய 50வது மற்றும் 75வது சுதந்திர தின மெல்லோட்டத்தில் நானும் பங்கு கொண்டேன் என்பதை தனிப்பட்ட பெருமையாக கருதுகிறேன்.
பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் தொழில் செய்யலாம் என்று அனேகர் இருக்கும் வேளையில், கொள்கை பிடிப்புடன் 'உண்மையின் உரைகல்' என்ற ஒற்றை சொற்றொடரை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வரும் 'தினமலர்' நாளிதழ் நிர்வாகத்திற்கு எனது பேரன்பும், நன்றி கலந்த பாராட்டுக்களும்.
இத்தகைய சேவைகள் தலைமுறை தாண்டியும் தொடர்வது அவசியமே... தமிழ் போல் வாழ்க...
இப்படிக்கு,
சிவராம்
நிர்வாக இயக்குனர்,
கிளாசிக் போலோ, திருப்பூர்
மேலும்
-
தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள்: கேட்கிறார் ராகுல்
-
நடுவானில் விமானத்தின் முகப்பு கண்ணாடியில் விரிசல்: விமானி காயம்
-
தீபாவளி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்கள்
-
பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்; தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்!
-
கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: தூதர் பேட்டி
-
தீபாவளி முடிந்து சொந்த ஊர் திரும்புவோர் கவனத்திற்கு... தென் மாவட்ட மக்களுக்கு ரயில்வே அறிவிப்பு