ஹாங்காங் விமான நிலையத்தில் பரபரப்பு; சரக்கு விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி கடலில் விழுந்ததில் 2 பேர் பலி

3


பீஜிங்: ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்தது. இந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர்.


சீனாவில் உள்ள ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. விமானம், ஓடுபாதையில் இருந்து கடலில் விழுந்து நொறுங்கியது.


இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய விமானம் எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், விமானத்தில் இருந்த நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.


போயிங் 747 சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுவரை விமான நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அண்மைக் காலமாக அடிக்கடி விமானங்கள் விபத்தில் சிக்கி வருவது பயணியர் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

Advertisement