அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல சதி; முறியடித்தது எப்பிஐ

வாஷிங்டன்: அமெரிக்காவின் பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இருந்த முயற்சியை எப்பிஐ அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்தனர்.
பல்வேறு நாடுகன் விவகாரங்களில் தலையிட்டு வருவதால், அமெரிக்க அதிபர் டிரம்பின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பென்சில்வானியாவில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது காதில் குண்டு காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்த சம்பவம் நடந்த இரு மாதங்களுக்குப் பிறகு, கோல்ப் மைதானத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற 59 வயது ரியான் வெஸ்லே என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தின் அருகே, துப்பாக்கி ஒன்று தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததை அமெரிக்க பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் ரகசிய சேவை பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், உயரம் குறைவான படிக்கட்டுகளை பயன்படுத்தி விமானத்தில் ஏறினார்.
இது குறித்து "மேற்கு பாம் பீச்சிற்கு அதிபர் டிரம்ப் வருவதற்கு முன்பு, ஏர் போர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கும் பகுதியை நோக்கி துப்பாக்கி ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததை அமெரிக்க ரகசிய போலீசார் கண்டுபிடித்தனர்," என்று எப்பிஐ இயக்குனர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும், துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் இல்லை என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.





மேலும்
-
போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி; எனது அதிர்ஷ்டம் என பெருமிதம்!
-
சரவெடி தீபாவளி; இந்தாண்டு ரூ.7,000 கோடி பட்டாசுகள் விற்பனை
-
சமூக பணியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கிறது 'தினமலர்' நாளிதழ்
-
ஒவ்வொரு வாசகரையும் இப்போது போல் நுாறாண்டுகள் கடந்தும் 'தினமலர்' திருப்திபடுத்தும்
-
டில்லியில் விமானத்தில் பற்றி எரிந்த திடீர் தீ… அலறிய பயணிகள்
-
பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கிறது ரயில்வே அமைச்சகம்