நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி!

9

புதுடில்லி: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.


நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். புத்தாடை அணிந்தும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.


ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தியாவில் தீபாவளி ஒரு பெரிய மற்றும் பிரபலமான பண்டிகை. இது இருளின் மீது ஒளியின் வெற்றியையும், அறியாமையின் மீது அறிவு வெற்றி பெற்றதையும், அநீதியின் மீதான நீதியின் வெற்றியையும் குறிக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை வெளிப்படுத்துகிறது.


சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டு, இந்த பண்டிகையை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவர வாழ்த்துகிறேன். இவ்வாறு திரவுபதி முர்மு கூறியுள்ளார்.


தீபத் திருநாள்




இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் சக குடிமக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த புனிதமான தீபத் திருநாள் அனைவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரச் செய்யட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.



@block_P@

வாழ்த்துக்கள்!

தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செழிப்பும் கிடைக்கட்டும்!block_P

Advertisement