பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்; தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்!

புதுடில்லி: இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ்
விக்ராந்தில் இன்று பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார், கோவா கடற்கரையில் இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கழித்தார்.
தற்போது இந்த போர்க்கப்பல் குறித்து தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் குறித்து ஒரு சிறப்பு அலசல்!
*இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த். 2022ம் ஆண்டு இயக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த், சொந்தமாக விமானம் தாங்கிக் கப்பல்களை வடிவமைத்து கட்டமைக்கும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைத்தது.
* கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இது, இந்தியாவின் வளர்ந்து வரும் கடற்படை மற்றும் தொழில்துறை வலிமையை பிரதிபலிக்கிறது.
* 'விக்ராந்த்' என்ற பெயருக்கு "தைரியமான" அல்லது "வெற்றியாளர்" என்று பொருள்.
* 262 மீட்டர் நீளமும் 62 மீட்டர் அகலமும் கொண்டது. தோராயமாக இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவு மற்றும் 18 தளங்கள் உயரம் கொண்டது.
* இது கிட்டத்தட்ட 1,600 பேர் கொண்ட குழுவினரையும், 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும், 2,400 பெட்டிகளையும் கொண்டுள்ளது, மேலும் 250 டேங்கர் எரிபொருள் கொண்டு செல்கிறது.
* இந்த விமானம் தாங்கிக் கப்பலில் MiG-29K போர் விமானங்கள் மற்றும் பல்வேறு ஹெலிகாப்டர்கள் உட்பட 30 விமானங்கள் வரை தாங்கும் சக்தி கொண்டது.
* பல வருட சோதனைகள் மற்றும் அனுமதிகளுக்குப் பிறகு, ஐஎன்எஸ் விக்ராந்த் கடந்த ஆண்டு முழு செயல்பாட்டு அந்தஸ்தைப் பெற்றது. இப்போது மேற்கு கடற்படை கட்டளையின் கீழ், இது இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் சிக்கலான கடற்படைப் பணிகளைக் கையாளத் தயாராக உள்ள ஒரு முழுமையான திறன் கொண்ட போர்க்கப்பலாக திகழ்ந்து வருகிறது.






மேலும்
-
ஒவ்வொரு நாட்டிலும் சுதேசி வருகிறது: ஸ்ரீதர் வேம்பு
-
பழம்பெரும் பாலிவுட் நடிகர் அஸ்ரானி காலமானார்
-
பீஹார் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களை திரும்ப பெற்றது ஜேஎம்எம்; கூட்டணியை முறிக்க ஆலோசனை
-
நடுவானில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: அசாமில் அவசர தரையிறக்கம்
-
உலகின் பல நாடுகளில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்
-
வாய்ப்பை எதிர்நோக்கி குல்தீப் * இரண்டாவது போட்டியில்...