தீபாவளி முடிந்து சொந்த ஊர் திரும்புவோர் கவனத்திற்கு... தென் மாவட்ட மக்களுக்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தீபாவளி தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் சென்னை திரும்புவதற்காக, திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 22ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில், வரும் அக். 23ம் தேதி பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். நள்ளிரவு 12.05 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
ஒவ்வொரு நாட்டிலும் சுதேசி வருகிறது: ஸ்ரீதர் வேம்பு
-
பழம்பெரும் பாலிவுட் நடிகர் அஸ்ரானி காலமானார்
-
பீஹார் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களை திரும்ப பெற்றது ஜேஎம்எம்; கூட்டணியை முறிக்க ஆலோசனை
-
நடுவானில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: அசாமில் அவசர தரையிறக்கம்
-
உலகின் பல நாடுகளில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்
-
வாய்ப்பை எதிர்நோக்கி குல்தீப் * இரண்டாவது போட்டியில்...