தீபாவளி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்கள்

லண்டன்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாடை உடுத்தியும், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி வீடுகளில் விளக்கு ஏற்றி மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்:
பிரிட்டனில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான தீபாவளி வாழ்த்துகள்.
இம்மாத துவக்கத்தில் நான் மும்பையில் பக்தி, மகிழ்ச்சி மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிணைப்புகளின் அடையாளமாக தீபம் ஏற்றினேன். இந்த தீபத் திருநாளை கொண்டாடும் வேளையில், அனைவரும் நம்பிக்கையுடன் முன்னோக்கிப் பார்க்கக்கூடிய பிரிட்டனை கட்டமைப்போம்.
@twitter@https://x.com/Keir_Starmer/status/1980201980392792166twitter
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்
இருளின் மீது ஒளி மேலோங்குகிறது. பயத்தின் மீது நம்பிக்கை மேலோங்குகிறது. தீபாவளியைக் கொண்டாடும் வேளையில், நம் வீடுகளை நிரப்பும் ஒளியை மட்டுமின்றி நம் இதயங்களில் அது கொண்டுள்ள பொருளையும் நாம் கொண்டாடுகிறோம். அனைவருக்கும் ஒளிமயமான மற்றும் அர்த்தமுள்ள ஒளித்திருவிழா வாழ்த்துகள்
@twitter@https://x.com/LawrenceWongST/status/1979868332905160988
twitter
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். ஒளிக்கான விழாவை கொண்டாட ஒன்று சேரும் நேரத்தில் உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கான நம்பிக்கை மேலோங்கட்டும். இந்த பண்டிகை மிகச்சிறப்பான பண்டிகை .
@twitter@https://x.com/AlboMP/status/1980020987480650176twitter
மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்
ஒளித்திருநாளான தீபாவளி திருநாள், வாழ்க்கையில் இருள் என்னும் தீமைகள் யாவும் நீங்கி நன்மைகள் சூழும் ஒளித் திருநாளாகவும் அமைந்துள்ளது. பல்வேறு கலாச்சாரப் பண்பாடுகளையும் நம்பிக்கைகளையும் கொண்ட வளமான குடிமக்கள் எனும் அடிப்படையில், ஒருவரை ஒருவர் மதிக்கும் மனப்பாங்கு, பரஸ்பரப் புரிதல், மிதமான போக்கு அனைத்தையும் மேலும் வலுப்படுத்துவதை நாம் அனைவரும் உறுதிச் செய்ய வேண்டும். இத்தருணத்தில், இன ஒற்றுமையை வளர்த்து, பொதுவான நிலைப்பாட்டைக் கண்டறிந்து, துன்பத்தில் வாழ்பவர்களுக்கு உதவும் மனப்பான்மையை மேலோங்கச் செய்ய வேண்டும்.
எனவே, இந்தத் தீபாவளி திருநாள் புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும் கொண்டாடப்படுவதோடு, அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும் நாட்டின் வளமும் தொடர்ந்து உயர வேண்டும்.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்து!!!
@twitter@https://x.com/anwaribrahim/status/1980062106650382651
twitter
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க
இந்த தீபாவளி நன்னாளில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு வாழ்த்துகள். நமது வீடுகளில் விளக்கு ஏற்றும் இந்நேரத்தில், நமது மனங்களில் உள்ள இருளை, நமது கூட்டு முயற்சியை ஒளிரச் செய்யும். தீமையை நன்மை வென்றதன் இந்த கொண்டாட்டம் போதைப்பொருள் துஷ்பிரயோகம் முதல் பயங்கரவாதம் வரை நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களைத் தோற்கடிப்பதற்கான நமது அரசின் உறுதியை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்புடனும் மற்றும் கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான செழிப்பான தேசத்தை கட்டியெழுப்புவோம்.
https://x.com/anuradisanayake/status/1980061115997638751
டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபோட்
டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபோட், கவர்னர் மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இதில் இந்திய தூதரக அதிகாரி டி.சி. மஞ்சுநாத், இந்திய அமெரிக்கா வம்சாவளியினர் பங்கேற்றனர்.இவ்விழாவில், இருளை ஒளி வெற்றி கொள்வதை குறிக்கும் வகையில், கவர்னர் அபோட், அவரது மனைவி செசிலியா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விளக்கேற்றினர். அப்போது தீபாவளி வாழ்த்து தெரிவித்த கவர்னர், அமெரிக்காவில் வசிக்கும் வம்சாவளியினர், நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை பட்டியலிட்டார்.









மேலும்
-
ஒவ்வொரு நாட்டிலும் சுதேசி வருகிறது: ஸ்ரீதர் வேம்பு
-
பழம்பெரும் பாலிவுட் நடிகர் அஸ்ரானி காலமானார்
-
பீஹார் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களை திரும்ப பெற்றது ஜேஎம்எம்; கூட்டணியை முறிக்க ஆலோசனை
-
நடுவானில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: அசாமில் அவசர தரையிறக்கம்
-
உலகின் பல நாடுகளில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்
-
வாய்ப்பை எதிர்நோக்கி குல்தீப் * இரண்டாவது போட்டியில்...