எழுத்தாளர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: எழுத்தாளர் சிவசங்கரி வீடு உட்பட ஐந்து இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, வழக்கம்போல நேற்று காலையும் வந்த இ - மெயிலில் ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் கொடுக்கப்பட்டிருந்த இடங்களான ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தைவான் துாதரகம், தேனாம்பேட்டையில் உள்ள இந்தியா டுடே அலுவலகம், அண்ணா சாலை தர்கா, முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வீடு மற்றும் எழுத்தாளர் சிவசங்கரி வீட்டில், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதில், மர்ம பொருட்கள் ஏதும் சிக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

Advertisement