இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.6 ஆக பதிவு

2

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கை.

இந் நிலையில் இன்று அங்குள்ள மலுகு தீவுகளில் அமைந்துள்ள பாண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.6 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தை ஜெர்மனி புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 137 கிமீ கடல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement