ரூ.8 கோடி கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
அவனியாபுரம்: தாய்லாந்து நாட்டிலிருந்து இலங்கையின் கொழும்பு நகரம் வழியாக மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா 8 கிலோவை சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
கொழும்புவில் இருந்து நேற்று முன்தினம் காலை மதுரைக்கு 'ஸ்ரீலங்கன்' விமானம் வந்தது. அந்த விமானத்தில் கடத்தல் பொருட்கள் வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. விமானத்தில் வந்த பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர்.
தஞ்சாவூர், பாபநாசம் சக்கரா பள்ளி முஹம்மத் மைதீன், 26, சென்னை சாகுல் ஹமீது, 50, ஆகியோர் வைத்திருந்த உடைமைகளில் தலா 4 கிலோ உயர்ரக கஞ்சா மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை சி.பி.ஐ., விசாரணையை எதிர்ப்பது ஏன்? தி.மு.க., அரசு மீது அன்புமணி சந்தேகம்
-
லாஸ்பேட்டையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
-
ஏனாமில் கோ கோ போட்டி புதுச்சேரி மாணவருக்கு முதல் பரிசு
-
மதிப்பெண் அடிப்படையில் செவிலியர் தேர்வு ஊழலுக்கு வழி வகுக்கும்: எதிர்க்கட்சி தலைவர்
-
கல்லுாரி மாணவிகளுக்கு பரிசளிப்பு
-
கோவில் உண்டியல் திருட்டு
Advertisement
Advertisement