பைனான்சியர் கடத்தல் வழக்கு மதுரையில் இருவர் கைது
விழுப்புரம்: பைனான்சியரை காரில் கடத்திய வழக்கில், மதுரையில் பதுங்கியிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அருகே வளத்தியை சேர்ந்தவர் சிவா, 40; பைனான்சியர். இவரை, நேற்று முன்தினம், 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றதோடு, 4 லட்சம் ரூபாய் மற்றும் பாஸ்போர்ட், வாட்சுகள் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றது.
தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீசார், மாவட்டம் முழுதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால், சுதாரித்துக்கொண்ட கடத்தல் கும்பல், சிவா மற்றும் அவரின் காரை விட்டு, தப்பி சென்றது.
போலீசார் சிவாவை மீட்டதோடு, இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடினர்.
இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம், அயன்சல்வார்பட்டை சேர்ந்த கணேசமூர்த்தி, 28; திருத்தங்கல் கிராமத்தை சேர்ந்த வைரமுத்து, 21; ஆகியோர், மதுரையில் தனியார் விடுதியில் பதுங்கியிருந்தது தெரிந்தது, இருவரையும் கைது செய்து விழுப்புரம் அழைத்து வந்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பபலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை சி.பி.ஐ., விசாரணையை எதிர்ப்பது ஏன்? தி.மு.க., அரசு மீது அன்புமணி சந்தேகம்
-
லாஸ்பேட்டையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
-
ஏனாமில் கோ கோ போட்டி புதுச்சேரி மாணவருக்கு முதல் பரிசு
-
மதிப்பெண் அடிப்படையில் செவிலியர் தேர்வு ஊழலுக்கு வழி வகுக்கும்: எதிர்க்கட்சி தலைவர்
-
கல்லுாரி மாணவிகளுக்கு பரிசளிப்பு
-
கோவில் உண்டியல் திருட்டு