விலை வீழ்ச்சி காரணமாக ஆற்றில் வீசப்பட்ட தக்காளி

திருச்சி: தக்காளி விலையில் சரிவு ஏற்பட்டதால், திருச்சி, காவிரி ஆற்றில், டன் கணக்கில் தக்காளி பழங்களை விவசாயிகள் கொட்டி சென்றுள்ளனர்.

திருச்சியில் சோமரசம்பேட்டை, அதவத்துார், வயலுார் கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி விளைச்சல் அதிகம் இருப்பதாலும், வெளி மாநில தக்காளி வரத்து அதிகம் இருப்பதாலும், 1 கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

வயலில் பறித்த தக்காளி பழங்களை விற்பனைக்கு, மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த விவசாயிகள், பறித்த கூலிக்கு கூட விலை கிடைக்காததால், 2 டன்னுக்கும் மேற்பட்ட தக்காளி பழங்களை திருச்சி, ஓயாமரி அருகே, காவிரி ஆற்றில் கொட்டி சென்றனர்.

Advertisement