மலேசியாவில் கார் பந்தயம் நடிகர் அஜித்,- நரேன் ஆலோசனை
கோவை: மலேசியாவில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித், பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனுடன் கோவையில் கலந்தாலோசித்தார்.
நடிகர் அஜித், ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். கடந்த ஜூன் மாதம் பெல்ஜியத்தில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3' சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில், இவரது அணி முதலிடம் பிடித்தது. சமீபத்தில், ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில், 3-வது இடம் பிடித்து 'ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்' என்ற சிறப்பு அங்கீகாரத்தையும் பெற்றார்.
வரும் டிச. 14ல் மலேசியாவில் நடக்கும் 'ஆசிய லீ மான்ஸ்' தொடரில் பங்கெடுப்பதற்கான தயாரிப்புகளை, அஜித் கார் ரேஸ் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இவரது அணியில், இந்தியாவின் பார்முலா 1 வீரர் நரேன் கார்த்திகேயன் இணைந்துள்ள நிலையில், இரு நாட்களுக்கு முன், கோவையில் இவரை சந்தித்து பேசினார்.
ஒண்டிப்புதுாரில் உள்ள ஜே.ஏ., மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் ரேசிங் கிளப்புக்கு வந்த அஜித், இதன் உரிமையாளர் ஆனந்த் மற்றும் நரேன் கார்த்திகேயனை சந்தித்து பேசினார். பின், கோவை கருமத்தம்பட்டியில், 111 ஏக்கர் பரப்பளவு கொண்ட உயர்தர பெர்மார்மன்ஸ் சென்டரான 'கோஸ்ட்' சென்று, நரேன் கார்த்திகேயனுடன், கார் பந்தயம் குறித்து ஆலோசித்தார்.
இதுகுறித்து, நரேன் கா ர்த்திகேயன் மேலாளர் விஷால் அரவிந்த் கூறுகையில், ''மலேசியாவில், டிச. மாதம் எல்.எம்.பி. 2, எல்.எம்.பி. 3, ஜி.டி., வகுப்புகளில், அஜித் கார் ரேஸ் நிறுவனம் உட்பட பல்வேறு அணிகள் பங்கேற்கின்றன. அஜித், நரேன் கார்த்திகேயன் இணைந்த அணி, எல்.எம்.பி., 3யில் பங்கேற்க உள்ளது. அஜித், நரேன் கார்த்திகேயனுடன் ஆலோசித்து, 'ஜினட்டா' என்ற பந்தய காரில் பயிற்சி மேற்கொ ண்டார்,'' என்றார்.
மேலும்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை சி.பி.ஐ., விசாரணையை எதிர்ப்பது ஏன்? தி.மு.க., அரசு மீது அன்புமணி சந்தேகம்
-
லாஸ்பேட்டையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
-
ஏனாமில் கோ கோ போட்டி புதுச்சேரி மாணவருக்கு முதல் பரிசு
-
மதிப்பெண் அடிப்படையில் செவிலியர் தேர்வு ஊழலுக்கு வழி வகுக்கும்: எதிர்க்கட்சி தலைவர்
-
கல்லுாரி மாணவிகளுக்கு பரிசளிப்பு
-
கோவில் உண்டியல் திருட்டு