தேசிய பொறியாளர் தின விழா

புதுச்சேரி: இந்திய பொறியாளர் அமைப்பின் புதுச்சேரி மாநில மையம் சார்பில், பாரத ரத்னா சர்.எம். விஸ்வேஸ்வரய்யாவின் 165வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய பொறியாளர் தின விழா அண்ணாமலை ஓட்டலில் நடந்தது.

இந்திய பொறியாளர் அமைப்பின் புதுச்சேரி மாநில மைய தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன், மின் துறை முன்னாள் செயற்பொறியாளர் சண்முகவடிவேல், முன்னாள் தலைமை நகர வடிவமைப்பாளர் கந்தர் செல்வன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பேசினார்.

2024-2025ம் ஆண்டிற்கான சிறந்த நிறுவன உறுப்பினர் விருது புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. தேவதாசு விழாவை தொகுத்து வழங்கினார்.

கவுரவ செயலாளர் சவுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

Advertisement