வாரிசுகளுக்காக அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கும் காங்., ஆர்ஜேடி; அமித் ஷா விளாசல்
பாட்னா: 'லாலு பிரசாத் தன்னுடைய மகன் தேஜஸ்வி யாதவை பீஹார் முதல்வராக்க விரும்புகிறார். சோனியா தன்னுடைய மகனை (ராகுலை) பிரதமராக்க பார்க்கிறார். ஆனால், இந்த இரு பதவிகளும் காலியாக இல்லை,' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பீஹார் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. நவ.,6 மற்றும் 11ம் தேதிகளில் ஒட்டுப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜ, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணிக்கும், காங்கிரஸ், ஆர்ஜேடி அடங்கிய மஹாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கூட்டணி கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தர்பாங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசியதாவது; நாங்கள் பாஜ வேட்பாளராக 25 வயதே ஆன மைதிலி தாகூருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். இவருக்கு எந்தவித அரசியல் பின்னணியும் கிடையாது. ஆனால், இதுபோன்ற நிகழ்வு காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் நடக்க வாய்ப்பே இல்லை. லாலு பிரசாத் தன்னுடைய மகன் தேஜஸ்வி யாதவை பீஹார் முதல்வராக்க விரும்புகிறார். சோனியா தன்னுடைய மகனை (ராகுலை) பிரதமராக்க பார்க்கிறார். ஆனால், இந்த இரு பதவிகளும் காலியாக இல்லை.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சட்டப்பிரிவு 370ஐ 70 ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளனர். பிரதமர் மோடி, 2019ம் ஆண்டு ஆக.,5ம் தேதி அதனை ரத்து செய்து உத்தரவிட்டார். ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இன்று சர்ஜிக்கல் ஸ்டிரைக், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளால் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்து வருகிறோம்.
பயங்கரவாத அமைப்பான பிஎப்ஐ (PFI)-ஐ தடை செய்து, அதன் உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். அவர்கள் மீண்டும் வெளியே வர முடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், லாலு பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பிஎப்ஐ உறுப்பினர்கள் சிறையில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள், இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (8)
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
29 அக்,2025 - 20:39 Report Abuse
ஒரு திறமையும் இல்லாத, ஒண்ணுக்கும் ஒதவாத, ஒம்மோட வாரிசு எங்கே எப்படி மேலே இருக்கார்? 0
0
Reply
பேசும் தமிழன் - ,
29 அக்,2025 - 19:43 Report Abuse
தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டு நலனுக்காக பாடுபடும் அரசை அமைக்க போராடி கொண்டு இருக்கிறார்கள்.... ஆனால் ஊழல் இண்டி தங்கள் குடும்ப நலனுக்காக.... எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்.... ஆனால் மக்கள் எப்போதும் போல வரும் தேர்தலிலும் ஊழல் இண்டி கூட்டணி ஆட்களை விரட்டி அடிப்பார்கள். 0
0
Reply
Raja k - ,இந்தியா
29 அக்,2025 - 19:06 Report Abuse
உங்க வாரிசு என்ன பண்ணுறாங்க ஜீ, உலகிலேயே அதிக பணம் பலம் பொருந்திய கிரிக்கெட் அமைப்பை உங்கள் வாரிசுதானே ஆட்சி செய்கிறார். 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
29 அக்,2025 - 18:47 Report Abuse
அடுத்த தொப்பி. எப்படியெல்லாம் வேஷம் போடுறாங்கப்பா 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
29 அக்,2025 - 18:41 Report Abuse
லாலு பிரசாத் தன்னுடைய மகன் தேஜஸ்வி யாதவை பீஹார் முதல்வராக்க விரும்புகிறார். சோனியா தன்னுடைய மகனை ராகுலை பிரதமராக்க பார்க்கிறார். அதுமட்டுமா திராவிட மாடல் அரசில் தாத்தா ஆண்டார் பிறகு புள்ளையாண்டான் ஆளுகிறார் பிறகு பேராண்டி ஆளப்போகிறார் அதன்பிறகு இப்போதிலிருந்தே தயார் செய்துவரும் கொள்ளுப்பேரன் ஆளவும் தயார் செய்வதாக தொடங்கி விட்டார்கள் பிறகு மன்னர் பரம்பரை ராஜபரம்பரை ஜனநாயாகமே இல்லை இல்லை இல்லை... 0
0
Reply
Abdul Rahim - ,இந்தியா
29 அக்,2025 - 16:18 Report Abuse
இது விளாசல் இல்லை இது வெற்று புலம்பல்...... 0
0
Iyer - Karjat,இந்தியா
29 அக்,2025 - 18:28Report Abuse
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும் - இது விலாசலா இல்லை வெற்று புலம்பலா என்று தெரியும் - Mr. AR. 0
0
Reply
Abdul Rahim - ,இந்தியா
29 அக்,2025 - 16:16 Report Abuse
நீர் பேசுறது ஏதாச்சும் பீஹார் அரசியலை பற்றியோ பீகார் நலத்திட்டங்கள் பற்றியோ இல்லியே காரணம் உங்களுடைய அடிமை பல்டிக்குமார் ஆட்சியில் பீகார் பின்தங்கிவிட்டது ஒரு முன்னேற்றமும் இல்லை பீகார் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிமாநிலங்களில் பிழைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை அதனால் உங்களால் அவற்றை பற்றி பேச துப்பில்லாமல் தேஜஸ்வி மற்றும் ராகுல் குடும்பங்களை பற்றி பேசி சமாளிக்கிறீர்கள்.... 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement