தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தென்காசி: மத்திய பாஜ அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை அனைத்து வகையிலும், அனைத்து துறைகளிலும் முன்னேற்றி வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம். திமுக ஆட்சியில் வேளாண்மை உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையத்திலும் நாள்தோறும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
விரக்தியில் பழனிசாமி
ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இது எதுவும் தெரியாமல் பழனிசாமி பேசி வருகிறார். திராவிட மாடல் அரசுடன் மக்களுக்கு இருக்கிற நெருக்கம்தான் பலரை தூங்கவிடாமல் செய்துள்ளது. அதனால்தான், நாள்தோறும் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதிலும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார். விரத்தியின் உச்சியில் தொடர்ந்து பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதையும் பழனிசாமியிடம் எதிர்பார்க்க முடியாது. அவரின் வரலாறே அதுதான்.
ரூ. 37,000 கோடி
மக்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி. மக்களை காக்கவே இந்த ஆட்சி. மக்களை வளர்க்கவும், மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி. இந்த நான்கையும், நான்காண்டு காலமாக செய்து வருகிறோம். நாங்கள் எப்போதும் மக்களை நினைத்து ஏங்குவதால் தான் மக்களாகிய நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மூலம் ஓட்டுகளை திருட பாஜ முயற்சிக்கிறது. பாஜ திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. வேறுபாடுகளை கடந்து அனைத்துக்கட்சிகளும் பங்கேற்க வேண்டும்.
தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ. 37,000 கோடி நிதியை மத்திய பாஜ அரசு கொடுக்க மறுக்கிறது.
வாக்குரிமை
கொடுத்தால் தமிழக வளர்ச்சி அடைந்துவிடும் என்பதால் தான். ஆனாலும் திமுக அரசு மக்களை காக்கும். மக்களைக் காக்க திமுக அரசுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியது இல்லை.பேரிடர் நிதியை கூட மத்திய அரசு தரவில்லை. மத்திய பாஜ அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமை தான் அதை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். வாக்கு திருட்டு போன்ற பாஜவின் முயற்சிகளை முறியடிப்போம். தமிழக மக்களின் வாக்குரிமையை காப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
10 புதிய அறிவிப்புகள்
தென்காசிக்கு முதல்வர் ஸ்டாலினின் 10 புதிய அறிவிப்புகள்:
* தென்காசி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூ.15 கோடியில் 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
* தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.
* ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 கோடி செலவில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
* சிவசைலத்தில் உள்ள கடனா அணை ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும்.
* அடவி நயினார் அணைத்திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் அணைக்கட்டுகள், கால்வாய்கள், குளங்கள் சீரமைக்கப்படும்.
* ரூ.52 கோடி மதிப்பீட்டில் தென்காசி மாவட்டத்திற்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.
* வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள மாறாந்தை கால்வாய் ரூ.2 கோடி செலவில் சீரமைக்கப்படும்.
* வரட்டாறு ரூ.4 கோடி செலவில் தூர்வாரப்படும். தென்காசி விகே புதூர் 6ம் கால்வாய் சீரமைக்கப்படும்.
* தென்காசியில் கண்மாய்கள் ரூ.12 கோடியில் சீரமைக்கப்படும்.
* கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம் கட்டி தரப்படும்.
38000 கோடி தர வேண்டும் ஒன்றிய அரசு என்று தென்காசி கூட்டத்தில் மக்களிடம் எங்கள் அப்பா சொல்லி இருக்கிறார் அப்பாவி பொது ஜனம் இவரு சொல்வதை ஆவென்று வாயை பிளந்து கேட்டு கொண்டு விசில் அடித்து கை தட்டி வரவேற்கிறார்கள் காரணம் அறியாமை மற்றும் ஏழ்மை , இதெல்லாம் மகா பாவம் அநீதி என்று ஸ்டாலின் அப்பாக்கு தெரியாதா
சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று நம்புவது போல் தான் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து விட்டால் தமிழக பொருளாதார வளர்ச்சி நின்று விடும் என்று சங்கிகள் நம்புவதும்! அறியாமையின் உச்சம்!
உண்மையான பெயரை போடு பச்சை
அதாவது, போதை யாவாரத்தில் பிரேசில் & தென்னமெரிக்க நாடுகளை முந்தி சாதனை படைக்கும் என்கிறார்...சின்டிகேட், கார்ட்டெல் வியாபாரம் எல்லாம் இவர்களுக்கு அத்துப்படி அல்லவோ?
888 கோடி ஊழல் பணமும் ஆளும் குடும்பத்துக்கே. நம்பி வசூல் செய்து கொடுத்த அமைச்சருக்கு ஜெயில் காத்திருக்கிறதா? சான்சே இல்லை. மேல்நீதிமான் அப்படி?.
ஆமாம் திராவிடர்களால்... தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது.
அப்பா கூறுகிறார், "மக்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி. மக்களை காக்கவே இந்த ஆட்சி. மக்களை வளர்க்கவும், மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி. இந்த நான்கையும், நான்காண்டு காலமாக செய்து வருகிறோம்." கூறாதது "என் தந்தை என்னை கொணர்ந்தார். நான் என் மகனையும், அவன் அவன் மகனையும் கொண்டு வருகிறோம். நாங்கள் எப்போதும் மக்களை நினைத்து ஏங்குவதால் தான் மக்களாகிய நீங்கள் எங்களோடு சந்தோசமாக இருக்கிறீர்கள்." கவி அரசர் கண்ணதாசனின் "அத்திக்காய் காய் காய்" பாடல் தான் தமிழக மக்களுக்கு ஞாபகம்வருகிறது.
சென்னைவாழ் மக்களுக்கும் ,தமிழக மக்களுக்கும் ஒரு வேண்டுகோள் . சென்னையில் உள்ள greenways சாலையை ஒருமுறை சென்று பார்த்து இந்த சாலை எங்களுக்கேன் இல்லை என்று அரசிடம் எழுத்துமூலமாக கேளுங்கள் .இன்றே ஒரு தபால் கார்டை எடுங்கள் கேள்வியை எழுதுங்கள் முதல்வருக்கு அனுப்புங்கள் . தினமலருக்கும் ஒருவேண்டுகோள் .greenways சாலையை படம்பிடித்து பதிவிடுங்கள்.
ஒவ்வொரு தமிழரின் தலையில் 15 லட்சம் கடன்...இலவசத்தை கொடுத்து ஓட்டு திருட்டு. இதுல எந்த வளர்ச்சியை சொல்லுறீங்க?
குமாரு பயந்துட்டான் .
யாரும் தடுக்கவில்லை, தடுத்துக்கொண்டிருப்பது நீங்களும் உங்களோட குரூப்பும் தான்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா .தமிழகம் வளர்ச்சியில் பின்னோக்கி வேகமாக சீரழிவை நோக்கி வளர்ந்துவருகின்றது என்பது யாவரும் மறுக்கமுடியாது என்பது சீரழிந்த சாக்கடைக்கும் சாலைக்கும் வித்தியாசமில்லாத சென்னை சாலைகள் ,சாக்கடையில் வாழும் புளியன்தோப்பு மக்கள் ,இன்னும்பல எண்ணிலடங்கா சென்னையை சுற்றியுள்ளபகுதிகள் அடிப்படைவசதி யில்லா தமிழ்நாட்டின் கிராமங்கள் ,நடக்க வாகனங்கள் செல்லமுடியாத பாலவாக்கம் சாலை போன்றவைகளே சாட்சி .இதை யாராலும் மறுக்கமுடியாது .ஆனால் ஒரு கேள்விக்குமட்டும் விடைவேண்டும் .உங்கள் greenways சாலை மாதிரி எல்லா சாலைகளும் இல்லையே அது ஏன்?