வாலிபரை தாக்கிய 20 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த கருப்பன் மகன் வெங்கடேசன், 30; இவர், இறைச்சி வருவல் கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 27ம் தேதி சென்னை செல்வதற்காக தீயணைப்பு நிலையம் அருகே உள்ள கார் ஸ்டேண்டில் தனது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

அப்போது, கச்சிராயபாளையம் நோக்கி பைக்கில் சென்ற அடையாளம் தெரிந்த மூன்று பேர், வெங்கடேசனை மிரட்டி விட்டு சென்றுவிட்டனர். பின்னர் மூவரும் நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் வெங்கடேசன் கடைக்கு சென்று திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

படுகாயமடைந்த வெங்கடேசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரில் கள்ளக்குறிச்சி போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement