முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு
பசும்பொன்: ரூ.3 கோடி செலவில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு அவர் பேசியதாவது; 'அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்கள் ஒருமித்த இளவல் மாதிரி கம்பீரமாக காட்சியளித்த தேவர் திருமகன்,' என்று அண்ணாதுரை பாராட்டியுள்ளார். ஏராளமான அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் வந்து பசும்பொன் திருமகனாரின் நினைவு போற்றக்கூடிய இந்த மணிமண்டபத்தை, 1974ல் கருணாநிதி கட்டிக் கொடுத்தார். பாம்பன் பாலத்தை கட்டிய நீலகண்டன் தான் இந்த மணிமண்டபத்தையும் கட்டினார்.
திமுக ஆட்சி முதல்முறையாக அமைந்த போது, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் எல்லாம், தங்களின் மக்களுக்கான கல்வி மேம்பாட்டிற்காக கல்லூரிகளை தொடங்க திட்டமிட்டார்கள். அவை அனைத்திற்கும் அனுமதி வழங்கியவர் கருணாநிதி. குறிப்பாக, முக்குலத்தோர் சமூகம் தங்களின் பெரும்பான்மையான இடங்களில் கல்லூரிகளை அமைக்க திட்டமிட்டார்கள். தேவர் கல்விச் சங்கம் உருவாக்கப்பட்டது. பசும்பொன் தேவர் கல்லூரி அமைக்கப்பட்டது. அந்தக் கல்லூரிக்கு 44.94 ஏக்கர் நிலத்தை கருணாநிதி வழங்கினார்.
ரூ.3 கோடி செலவில் தேவர் திருமகனார் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும், என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்ஸூம் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருமண மண்டபம் யாரவது கேட்டார்களா?
அப்பா, முத்துராமலிங்க தேவரை புகழ்கிறாரா அல்லது தனது தந்தையை புகழ்கிறாரா என்பது உடன் பிறப்புகளுக்கு மட்டுமே வெளிச்சம்.
விபூதி குடுத்தாங்களா?
1500 சதுர அடி x ரூ 10,000/சதுர அடி = ரூ 1.5 கோடி + திருட்டு முரடர்கள் கயவர்கள் கழகம் கமிஷன் 50% = ரூ 1.5 கோடி. திருமண மண்டபம் இந்த சைஸ் போதுமா???மேலும்
-
தொண்டர்களின் உற்சாகம் புது ஆற்றலை அளிக்கிறது: பிரதமர் மோடி
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: நவ.,24ல் பதவியேற்பு
-
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது
-
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் பாஜ., மனு
-
இந்தியாவுக்கு மேலும் 6 மாதம் சலுகை: அமெரிக்கா முடிவில் மாற்றம்
-
பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்ட குழந்தைகள் மீட்பு; குற்றவாளி சுட்டுக்கொலை